×

ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதியைப் பற்றி ஆவண குறும்படம் எடுத்த  The Elephant Whisperesrsக்கு ஆஸ்கர் விருது கிடைக்கப்பெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரகு, பொம்மி என்ற இரண்டு குட்டி யானைகளை பராமரிப்பது குறித்து ஆவண குறும்படம் தயாரிக்கப்பட்டது.

காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதிகளால் வளர்க்கப்பட்ட யானைகள் குறித்த The Elephant Whisperesrs என்ற இந்த ஆவண குறும்படத்தை குனெட் மொன்கோ தயாரிப்பில் கார்த்திகி கொன்சால்வேஸ் இயக்கினார். இந்திய தயாரிப்பில் முதல் முதலில் ஆஸ்கர் வென்ற படம் என்ற பெருமையை The Elephant Whisperesrs பெற்றுள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் வென்ற யானைகள் ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ், முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர், ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமை செயலகத்தில் ரூ.1 கோடிக்கான காசோலை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்று உலக அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்ததாக கார்த்திகி கொன்சால்வேஸுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperesrs ஆவண குறும்படத்தில் நடித்த முதுமலை தம்பதி பொம்மன் - பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Karthiki Gonzalez , Documentary Short Film Director Karthiki, Rs.1 Crore Incentive, Principal
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...